உலகம்

ஏமன் விமான நிலையத்தில் குண்டு வீச வேண்டாம்: சவுதியிடம் ஐ.நா. வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஏமன் சர்வதேச விமான நிலை யத்தில் குண்டு வீச வேண்டாம் என்று சவுதி அரேபியாவிடம் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டுப் போர் ஏற்பட் டுள்ள ஏமனில் ஹவுதி கிளர்ச்சி யாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஏராள மானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஐ.நா. உதவிப் பொருட்களை வழங்கி வருகிறது. ஏமன் தலை நகர் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலும் தொடர்ந்து குண்டுகள் வீசப்படுவதால் அங்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலைய பகுதியில் குண்டுகளை வீச வேண்டாம் என்று சவுதி அரேபிய அரசிடம் ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.வின் நிவாரண உதவிகள் குழு ஒருங்கிணைப்பாளர் ஜோகன்னஸ் வான் டெர் கூறியது:

சனா சர்வதேச விமான நிலை யம் மூலமாகத்தான் மீட்புப் குழு வினரையும், நிவாரணப் பொருட் களையும் ஏமனுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆனால் அங்கும் குண்டுகள் வீசப்படு வதால், போரில் காயமடைந்தவர் களுக்கு தேவையான மருந்துகள், உயிர் காக்கும் கருவிகள் உட்பட அத்தியாவசிய பொருட்களைக் கூட கொண்டு செல்ல முடிய வில்லை. எனவே விமான நிலை யத்தின் மீது தாக்குதல் நடத்து வதை சவுதி அரேபியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஏமனில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களிடையே மோதல் ஏற்பட்டு போர் வெடித் துள்ளது. சன்னி பிரிவினருக்கு ஆதரவாக சவுதி அரேபிய ராணுவம் மே 17-ம் தேதி முதல் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

SCROLL FOR NEXT