உலகக் கோப்பை கால்பந்து போட்டியை எதிர்த்து பிரேசிலில் சாவ் பாவ்லோ நகரில் நேற்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
வீடு இல்லாத தொழிலாளர்கள் சங்கம் என்ற அமைப்பு மூலம் இந்த எதிர்ப்பு பேரணி நடத்தப் பட்டது. நாட்டின் தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பு மக்கள் வறுமையில் வாடி வரும் நிலை யில் உலகக் கோப்பை கால் பந்து போட்டிக்காக அரசு கோடிக் கணக்கான பணத்தை வீணாக செலவு செய்வதாக அந்த அமைப் பினர் குற்றச்சாட்டியுள்ளனர்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நாங்கள் எதிர்க்க வில்லை. அதனை நடத்துவதற் காக பிரேசில் அரசு பெருமளவு பணத்தை விரயம் செய்வதைத் தான் எதிர்க்கிறோம்.
இதனால் வரி செலுத்துவோ ருக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். மழை பெய்ததையும் பொருட் படுத்தாது பேரணியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர். ஒரு வாரகால தொடர் போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய பேரணியால் சாவ் பாவ்லோ நகரில் பெரும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இத னால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முன்னதாக நேற்று முன்தினம் போக்குவரத்துத் தொழி லாளர் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட னர். இதனாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைபாதிக்கப் பட்டது.
பிரேசிலில் ஆசிரியர்கள், போலீ ஸார், வங்கி பாதுகாப்பு ஊழியர் கள் என பலரும் சமீபகாலத்தில் போராட்டத்தில் குதித்துள்ளனர். உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12 முதல் ஜூலை 13-ம் தேதி வரை பிரேசிலின் 12 நகரங்களில் நடைபெறவுள்ளது.