இலங்கை இறுதி கட்டப் போரின்போது தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்தின் உண்மை நிலை இதுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசுப் படை களுக்கும் விடுதலைப் புலிகளுக் கும் இடையே 2009 மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின்போது சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் 6-வது ஆண்டு நினைவுதினம் உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக அனுசரிக்கப்பட்டது.
2009 மே 18-ம் தேதி முல்லைத் தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதையொட்டி இலங்கையின் தமிழர் பகுதிகளில் நேற்று இரங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற நினைவுதின நிகழ்ச்சி யில் வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் உட்பட பல் வேறு தலைவர்கள் கலந்து கொண் டனர். இதில் விக்னேஸ்வரன் பேசியதாவது:
கடைசிக் கட்டப் போரின்போது உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இன்று நினைவுகூர் கிறோம். இந்த நாள் உலகம் முழுவதும் வாழ்கிற தமிழர்களை உலுக்கிய சோகமான நாள். மனித உரிமைகள் மறக்கப்பட்டு, ஊடகங்களுக்கு அனுமதி மறுக் கப்பட்டு, சாட்சியில்லாமல் நடத்தப்பட்ட யுத்தம் முள்ளிவாய்க் கால் போர். இதில் அப்பாவிப் பெண்கள், குழந்தைகள் ஏராள மானோர் பலியாகினர்.
இறுதிகட்டப் போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்து போய்விட்டன. ஆனால் போரில் உயிரிழந்த தமிழர்கள் தொடர்பான உண்மை நிலை இதுவரை வெளிக்கொணரப் படவில்லை.
இந்த விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பும், சர்வதேச சமூகமும் தலையிட்டு உண்மை நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.
இலங்கையின் இப்போதைய ஆட்சியாளர்கள், தமிழர்கள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைந்து இனப் பிரச் சினைக்கு தீர்வுகாண முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இலங்கையின் சில பகுதிகளில் நினைவு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் எவ் வித அசம்பாதவிதங்களும் நடை பெறவில்லை என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் அமெரிக்கா, பிரிட்டன், நார்வே, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நேற்று நினைவுதினம் அனுசரிக் கப்பட்டது.