உலகம்

அமெரிக்காவில் ஜூன் 21-ல் சர்வதேச யோகா தினம்

பிடிஐ

அமெரிக்காவில் வரும் ஜூன் 21-ம் தேதி இந்திய தூதரகம் சார்பில் முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அருண் கே.சிங் கூறியதாவது:

வாஷிங்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தேசிய அரங்கில், யோகா சங்கமான ‘ஃபிரண்ட்ஸ் ஆப் யோகா’ அமைப்புடன் இணைந்து வரும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது.

காலை 8.30 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் இவ்விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதிவு செய்யப்பட்ட சிறப்புரை வீடியோ மூலம் ஒளிபரப்பப்படும்.

மேலும் யோகா பயிற்சி பற்றிய நிபுணர்களின் விளக்கம், இந்திய இசை, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெறும். பொதுமக்கள் இதில் இலவசமாக கலந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிரிவித்தார்.

SCROLL FOR NEXT