உலகம்

தமிழர்களுடன் நல்லிணக்கம் ஏற்படுத்த முன்னுரிமை: சிறிசேனா

பிடிஐ

சிறுபான்மைத் தமிழர்களுடன் தேசிய அளவில் நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கே தமது அரசு முன்னுரிமை அளித்து வருவதாக, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுடனான போர் முடிந்த 6-வது ஆண்டு தினத்தை குறிக்கும் வகையில் மாத்தரை நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

"போரால் அழிந்த இடங்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்வதைவிட மனம் ஒடிந்துபோயுள்ளவர்களை அரவணைத்து ஈர்ப்பதே மிக முக்கிய பணியாகும்.

அனைத்து தரப்பினரின் நம்பிக்கையை பெற்று நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எனது அரசின் முக்கிய கொள்கை. போர் முடிவுக்கு வந்த பிறகு ராஜபக்ச தலைமையிலான முந்தைய அரசு தமிழர்களின் நம்பிக்கையை பெறவில்லை. இது வேதனையானதாகும்" என்றார் சிறிசேனா.

SCROLL FOR NEXT