மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஜகியுர் ரஹ்மான் லக்வி பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டது குறித்து ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஆய்வு செய்ய உள்ளது.
கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 165 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் மூத்த தலைவர் ஜகியுர் ரஹ்மான் லக்வி மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பான ஆதாரங் களை பாகிஸ்தான் அரசிடம் இந்திய அரசு அளித்துள்ளது. மேலும் அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரும் ஏராளமான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அளித்துள்ளனர்.
இதன்பேரில் லக்வியும் அவரது கூட்டாளிகள் 6 பேரை யும் பாகிஸ்தான் போலீஸார் கைது செய்து ராவல்பிண்டியில் உள்ள அடிலாபாத் சிறையில் அடைத்தனர்.
ஆனால் அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு தாக்கல் செய்யவில்லை. இதன்காரணமாக கடந்த ஏப்ரலில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரி விக்கப்பட்டது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் ஆட் சேபம் தெரிவித்தன.
இந்நிலையில் இந்த விவ காரம் குறித்து ஐ.நா. சபை யின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி கடிதம் மூலம் புகார் அளித்தார். தீவிரவாதி லக்வி விடுதலை செய்யப்பட்டது சர்வதேச சட்டவிதிகளுக்கு எதிரானது. அவரால் உலக அமைதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனை பரிசீலித்த பாது காப்பு கவுன்சில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண் டுள்ளது.
அதன்படி அடுத்த சில நாள்களில் நடைபெறும் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் லக்வி விவகாரம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது.
எனவே லக்வி விவகாரத் தில் ஐ.நா. சபை நேரடியாக தலையிடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.