விண்வெளி நிலையத் துக்கு ஆக்சிஜன், தண்ணீர், உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற ரஷ்யாவின் பிராக்ரஸ் விண்கலம் கோளாறு காரணமாக தொடர்பு இழந்த நிலையில், அது வெடித்து எரிந்துபோனது.
இந்த சம்பவம் பற்றி விசாரணைக்கு ரஷ்யாவின் ராஸ்காஸ்மோஸ் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
நம்பகத்தன்மை வாய்ந்த ரஷ்ய விண்கலம் ஏப்ரல் 28-ம்தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டது. புறப்பட்ட சில மணி நேரங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இல்லை. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை எடுத்துச்சென்ற இந்த விண் கலம் அங்குசெல்லாததால் வினியோகம் செய்ய முடியாமல் போனது. எனினும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு அத்தியாவசியப்பொருள்கள் பற்றாக்குறை இப்போதைக்கு இல்லை.
இந்த விண்கலம் வெடித்து எரிந்தது ரஷ்யாவின் விண் வெளித்திட்டத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
கடந்த 8-ம் தேதி மாஸ்கோ நேரப்படி 5.04 மணிக்கு பிராக்ரஸ் எம்-27 எம் விண்கலம் எரிந்தது. பசிபிக் பெருங்கடல் மத்திய பகுதியில் வளிமண்டலத்தில் நுழைந்த அந்த விண்கலம் வெடித்து எரிந்தது என்று ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்காஸ் மாஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்க ஒவ்வொரு வருடமும் இத் தகைய விண்கலங்களை அனுப்புகிறது ரஷ்யா. விநியோகித்து முடித் ததும் பூமிக்கு திரும்புகிறது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் அவை எரிந்துவிடும். சிலமட்டும் கடலில் இறங்கும். பிராக்ரஸ் விண்கலத்தை ஏற்றிச் சென்ற சோயூஸ் ராக்கெட்டில்தான் பிரச்சினை. அதனால்தான் விபத்து ஏற்பட்டதாக விண்வெளி ஆய்வுத் தொழில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.