சில நாட்களுக்கு முன்பு நைஜீரிய தலைநகரில் நிகழ்ந்த கார் வெடி குண்டு சம்பவத்தில் உயிரிழந் தோரின் எண்ணிக்கை 94-ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் சில தினங்களில் நைஜீரி யாவில் சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இக்குண்டுவெடிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியத் தலைநகரான அபுஜாவில் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 75 பேர் உயிரிழந்தனர். 141 பேர் காயமடைந்தனர். இச் சம்பவத்துக்கு போகோ ஹாரம் எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இக் குண்டுவெடிப்பில் காய மடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை நைஜீரிய காவல்துறை அறிவித்துள்ளது. இதனால் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.
வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை ‘ஆப்பிரிக்கா மீதான உலகப் பொருளாதார மாநாடு' எனும் சர்வதேச மாநாட்டை நடத்த வுள்ளது. இதில் சீனப் பிரதமர் லீ கெகியாங் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொள்ள இருக் கிறார். இந்த மாநாட்டில் எந்த அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடாமல் இருக்க சுமார் 6,000 காவலர் களைப் பாதுகாப்புப் பணியில் அமர்த்தியுள்ளது நைஜீரிய அரசு.
இளம்பெண்கள் கடத்தல்
வெடிகுண்டு சம்பவம் நடந்து முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அந்தத் தீவிரவாதிகள், நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 250 பதின்வயதுப் பெண்களைக் கடத்தியுள்ளார்கள். அவர்களில் 50 பேர் தப்பிவிட, மீதம் 200 பேரின் நிலை பற்றித் தெரியவில்லை.