உலகம்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வீர சிவாஜி புத்தகம்

செய்திப்பிரிவு

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வீர சிவாஜியின் புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்திய ஓவியர் பிரிஜேஸ் மோக்ரே வரைந்த சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடர்புடைய 100 ஓவியங்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் பாபாசாஹிப் புரேந்தர் இப்புத்தக்கத்தை வெளியிட்டார்.

88 பக்கங்கள் அடங்கிய இப்புத்தகத்தை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று அப்போது பாபாசாஹிப் புரேந்தர் தெரிவித்தார்.

‘‘உள்நாட்டின் சிறந்த ஆட்சியாளர்களைப் பற்றிய புத்தகங்களைப் படிக்க இந்திய மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. நெப்போலியன் குறித்த புத்தகம் இரண்டரை லட்சம் பிரதிகள் விற் கின்றன. ஆனால் வீர சிவாஜியின் புத்தகம் அதிக அளவில் விற்பது இல்லை’’ என்றும் அவர் கூறினார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி. கீத் வாஸ் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

அப்போது பேசிய அவர், பிரிட்டன் நாடாளுமன்ற நூலகத்தில் இப்புத்தகத்தை வைக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

SCROLL FOR NEXT