உலகம்

இந்தியாவும் சீனாவும் எங்கள் ஆதரவு நாடுகள் அல்ல: இலங்கை பிரதமர்

கே.சந்தோஷ்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இலங்கை ஆதரவான நாடு அல்ல என்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.

தமிழ் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, "இந்திய மீனவர்கள் அத்துமீறினால் அவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவார்கள்" என்று ரணியில் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது/

இந்த நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சனிக்கிழைமை இந்தியா வந்தடைந்தார். இலங்கை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்குச் சென்று, ஞாயிற்றுக்கிழமை 'துலாபாரம்' எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினார்.

அப்போது, மீனவர் பிரச்சினையில் கூறிய கருத்துகள் பற்றி அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "இலங்கை மக்களின் எண்ணங்களையே இலங்கை அரசும் பிரதிபலிக்கின்றது" என்றார்.

மேலும், இந்தியா - இலங்கை உறவு குறித்து அவர் கூறும்போது, "இந்தியப் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணமும், இந்தியாவுக்கு சிறிசேனா மேற்கொண்ட பயணமும் இரு நாடுகளுக்கு இடையே ஆன உறவை வலுபடுத்த உதவியது.

இதைத் தவிர இந்தியாவுக்கும் சரி... சீனாவுக்கும் சரி... இரு நாடுகளுக்குமே இலங்கை ஆதரவான போக்கில் செயல்படவில்லை" என்றார் ரணில்.

SCROLL FOR NEXT