வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 45 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.
சிறிய புயல் அளவுக்கு வீசிய சூறைக்காற்று கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடகிழக்கு பகுதிகளான பெஷாவர், சார்சத்தா, நவுஷெரா ஆகிய நகரங்களை துவம்சம் செய்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 186 பேர் காயமடைந் துள்ளனர். பெஷாவரில் மட்டும் 29 பேர் மழைக்கு பலியாகியுள்ளனர். பலியானவர்களில் குழந்தை களும் அடங்குவர்.
பெஷாவரின் முக்கிய சாலை களில் மரங்கள், செல்போன் கோபுரங்கள், கட்டிட இடி பாடுகள் ஆகியவை விழுந்துள்ள தால் போக்குவரத்து முடங்கி யுள்ளது.
பெஷாவரில் சூறைக்காற்று காரணமாக ஏராளமான கட்டிடங் களின் கூரைகள் சேத மடைந்துள்ளன. கொட்டித்தீர்த்த மழையால் சில பகுதிகளில் மூன்று அடி உயரத்துக்கு வெள்ளம் தேங்கியுள்ளது.
லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நவாஸ் ஷெரீப், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இரு ராணுவ படைப் பிரிவுகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளன.