உலகம்

புதிய செயற்கைக்கோளை ஏவியது சீனா

ஐஏஎன்எஸ்

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வழிகாட்டு மற்றும் இடம் சுட்டும் செயற்கைக்கோளை சீனா நேற்று முன்தினம் ஏவியது.

பெய்டவ் எனப் பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள் சிச்சுவான் மாகாணத்திலுள்ள ஜிசங் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச்-3 ஏவுகணை மூலம் ஏவப்பட்டது.

செயற்கைக்கோள்களுக்கு இடையிலான தொடர்புகளை ஏற் படுத்துதல், புதிய வகை வழிகாட்டு சமிக்ஞைகள் ஆகியவற்றின் மூலம் இது செயல்படும். சர்வதேச அளவி லான இணைப்பை இது கட்டமைக் கும் என சீன விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரும் வழிகாட்டு கட்டமைப்பை (நேவிகேஷன் சிஸ்டம்) உருவாக்கும் விதத்தில் சீனா பிடிஎஸ் செயற்கைக்கோள் களை ஏவி வருகிறது. தற்போது ஏவப் பட்ட செயற்கைக்கோள் பிடிஎஸ் வரிசையில் 17-வது செயற்கைக் கோள் ஆகும்.

SCROLL FOR NEXT