உலகம்

செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் சென்று திரும்பலாம்: புதிய விண்கலம் கண்டுபிடிப்பு

பிடிஐ

மின் சூரியக் காற்றுக் கலத்தின் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு பூமியிலிருந்து சென்று திரும்ப முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மின் சூரியக் காற்றுக் கலமானது, குறுங்கோள்களில் காணப்படும் நீரைப் பயன்படுத்தி எரிபொருளாக மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது.

இக்கலம் பின்லாந்தில் 2006-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இது, இயற்கையாகக் கிடைக் கும் சூரியக் காற்றை விண் கலத்துக்கான அமுக்கப்பட்ட எரிபொருளாக மாற்றும் திறன் கொண்டது.

பின்லாந்து வானியல் ஆய்வு மைய விஞ்ஞானி பெக்கா ஜென்ஹுனென் கூற்றுப்படி, மின் சூரியக்காற்றுக் கலத்தில் (இ-செயில்) உள்ள ஒரு சிறு கலம், பூமியின் காந்தப்புல அடுக்கத்துக்கு வெளியே காணப்படும் நீர் இருப்பதற்கான சாத்தியமுள்ள குறுங்கோள் களில் மண்ணில் இருந்து நீரை உறிஞ்சி எடுத்துக் கொண்டு, அதனை மின் சூரியக் காற்றுக் கலத்துக்கு வழங்கும்.

சூரியக் காற்றுக் கலத்தில் உள்ள குளிர் குடுவையில் அந்த நீர் ஆவி வடிவில் செலுத்தப்பட்டு நிரம்பியதும், சிறுகலம் பிரிந்து விடும். அந்த நீர் தேவையான வடிவில் எரிபொருளாக மாற்றப் பட்டு, சூரியக் காற்றுக் கலம் பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக் கும் பயணத்தை மேற்கொள்ளும்.

திரவ வடிவிலான ஹைட்ரஜன் அல்லது ஆக்சிஜன், செவ்வாய் கிரகத்துக்கும் பூமிக்கும் ஆட் களை அழைத்துச் செல்லும் கலத்தில் எரிபொருளாகப் பயன் படுத்தப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பயணத்தின்போது, குறுங்கோள்களிலிருந்து பெறப் படும் நீர், கதிர்வீச்சு பாது காப்பு கவசமாகவும் பயன் படுத்தப்படும்.

இந்த வாகனம் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அழைத்துச் சென்று, திரும்ப அழைத்து வர அதிக செலவு பிடிக்காத ஒன்றாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT