வீடுகள், அலுவலகங்களில் ஏ.சி.களை அதிகம் பயன்படுத்துவதால் புவிவெப்பம் பன்மடங்கு அதிகரித்து வருகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பாக அமெரிக்கா வின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அண்மையில் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள னர். அதில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் பணக்காரர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஏ.சி.க்களின் பயன்பாடும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
அமெரிக்காவில் 90 சதவீத வீடுகளில் ஏ.சி. உள்ளது. இதே போல சீனா, இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் ஏ.சி.க்களின் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
வீடு, அலுவலகத்தை குளுமை யாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஏ.சி.க்களை அதிகம் பயன்படுத்துகிறோம். அதேநேரம் அந்த ஏசிக்களில் இருந்து வெளி யாகும் ஹைட்ரோபுளூரோகார்பன் வாயுவால் நமது உலகம் சூடாகிக் கொண்டிருக்கிறது.
இதேநிலை நீடித்தால் புவிவெப்பம் கட்டுக் கடங்காமல் போய்விடும். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கப் பட்டுள்ளது.