உலகம்

தோல்வியடைந்த முயற்சி : பூமியை நோக்கி வரும் ரஷ்ய விண்கலம்

ஐஏஎன்எஸ்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு உணவு, எரிபொருள் மற்றும் விஞ்ஞான பரிசோதனைகளுக்கு உதவும் சாதனங்களை எடுத்து சென்ற ஆளில்லா ரஷ்ய விண்கல முயற்சி தோல்வியடைந்தது. அந்த விண்கலம் விரைவில் பூமியின் மீது மோதவுள்ளதாக நாசா கூறியுள்ளது.

தற்போது விண்வெளியில் கட்டுப்பாட்டை இழ்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் இந்த விண்கலம் பூமியை எரிந்து கொண்டே நெருங்கி மோதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கலத்தில் 2,721.5 கிலோ உணவு, எரிபொருள் மற்றும் விஞ்ஞான ஆய்வுக்கான சாதனங்கள் உள்ளன. ஆனால் இந்த முயற்சி தோல்வி கண்டுள்ளது.

ஆனால் இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள 6 ஆய்வாளர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்றும் பல மாதங்களுக்குத் தேவையான பொருட்கள் அவர்களிடம் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 25-ம் தேதிதான் இந்த 'புரோக்ரஸ் 59' சரக்கு விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட பிறகே அதனுள் ஏதோ பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. தற்போது விண்வெளியில் அது கட்டுப்பாடில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது.

இது எப்போது வேண்டுமானாலும் பூமியின் மீது மோதலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. ரஷ்ய விண்வெளி ஆய்வாளர்கள் இந்த விண்கலத்தின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகின்றனர் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT