உலகம்

குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து, கல்வியறிவு கிடைக்க நடவடிக்கை தேவை: வியட்நாமில் 166 நாடுகளின் எம்.பி.க்கள் கலந்து கொண்ட மாநாட்டில் முடிவு

செய்திப்பிரிவு

உலக அளவில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் கல்வியறிவு கிடைக்கச் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து வியட்நாமில் நடைபெற்ற ஒருங்கிணைந்த நாடாளுமன்றங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எம்.பி-க்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது ஒருங் கிணைந்த நாடாளுமன்றங்களின் கூட்டமைப்பு. குறைவான எண் ணிக்கையிலான நாடுகளின் எம்.பி-க்கள் சேர்ந்து 1883-ல் உருவாக்கிய இந்த அமைப்பில் இப்போது இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 166 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் 132-வது மாநாடு வியட்நாம் தலைநகர் ஹனாயில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்றது.

இதில் 166 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் கலந்துகொண்டனர். இந்தியாவிலிருந்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் பாஜக, காங்கிரஸ், திரிணமுல், சிவசேனா, மார்க்சிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 6 பேரும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில், பெரும் பாலான நாடுகள் இன்னமும் தங்களது மக்களுக்கான குடிநீர், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப் படை வசதிகளை இன்னமும் ஏற் படுத்தித் தராமல் இருப்பது குறித்து கவலையுடன் விவாதிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்ட இந்த மாநாட் டில் பெரும்பாலான நாடுகளில் குழந்தைகளுக்கு இன்னமும் போதிய ஊட்டச் சத்தும் அடிப் படைக் கல்வியும் கிடைக்காமல் உள்ளது. இந்த அவலத்தைப் போக்குவதற்கு அனைத்து எம்.பி-க்களும் தமது நாடுகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அனைத்து நாடுகளும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை 2015-ம் ஆண்டுக்குள் செய்து கொடுக்க வேண்டும்’ என்று 2000-ல் ஐ.நா. மன்றத்தில் நடந்த கூட்டத்தில் பிரகடனம் செய் யப்பட்டது. அதற்கு ‘மில்லனியம் டெவலப்மென்ட்’ என்று பெயரிடப் பட்டது. ஆனால், இன்னமும் பெரும்பாலான நாடுகள் அந்த இலக்கை எட்டவில்லை. அதனால், காலக்கெடுவை அண்மையில் மேலும் 15 ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும் ஐ.நா., அதற்கு ‘தொடர் வளர்ச்சியை நோக்கி’ என்று பெயரிட்டிருக்கிறது. ஹனாய் மாநாட்டில் இந்த தலைப்பை ஒட்டித்தான் விவாதங்கள் நடந்தன.

12 கோடி குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், கருவிலிருக்கும் குழந்தைக்கும் சொத்துரிமை அளிக்கும் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் உள் ளிட்டவைகள் இந்தியாவில் செம்மையாக செயல்படுத்தப் படுவது குறித்து இந்த மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பின் 133-வது மாநாடு செப்டம்பரில் ஜெனீவாவில் நடக்கிறது.

SCROLL FOR NEXT