கடந்த சனிக்கிழமையன்று நேபாளில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தின் விளைவாக சுமார் 3,40,000 பேர் தலைநகர் காத்மாண்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் இதுவரை 3,40,000 பேர் காத்மாண்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
பெருமளவில் கிராமப்பகுதிகளிலிருந்தும் மக்கள் வெளியேறி வருவதால், அவர்களுக்காக பள்ளிகள் பேருந்தையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது நேபாள் அரசு.
இந்நிலையில் நகர்கோட் என்ற இடத்தை மையமாகக் கொண்டு மற்றொரு நிலநடுக்கம் காத்மாண்டில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவி ஆய்வு மையம் கூறுகிறது.
சனிக்கிழமை ஏற்பட்ட பூகம்பம் காரணமாக நேபாளத்தில் 50,000 கருத்தரித்த பெண்கள் உட்பட சுமார் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
பதற்றம் சில பகுதிகளில் மறையவில்லை என்றாலும் தலைநகர் காத்மாண்டில் இயல்பு வாழ்க்கை மெதுவாக திரும்பிக் கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.