இந்தியாவில் 1984-ம் ஆண்டு சீக்கி யர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம் இனப் படுகொலைதான். அப்போது நாடுமுழுவதும் நடை பெற்ற பலாத்காரம், சித்ரவதை, ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டது ஆகிய வற்றுக்கு இந்திய அரசே பொறுப்பு என கலிபோர்னியா மாகாண அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
“அரசு மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் இக்கல வரத்தை திட்டமிட்டு நடத்தி, பங்கேற்றுள்ளனர், கொலை களைத் தடுப்பதில் தவறிவிட்ட னர்” எனவும் அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
இத்தீர் மானத்தை சாக்ரமென்டோ பகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜிம் கூப்பர், கெவின் மெக்கர்டி, ஜிம் கல்லாகெர், கென் கூலி ஆகியோர் இணைந்து வரைவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக கூப்பர் கூறும்போது, “1984-ம் ஆண்டு நடைபெற்ற கோரத்தை நம்பால் மாற்றமுடியாது. ஆனால், இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சட்டப் பேரவை பிரதிநிதியாக, அந்த நிகழ்ச்சிகளின் உண்மையை வெளிப்படுத்துவதும், பாதிக்கப் பட்டவர்களுக்கு மரியாதை அளிப்பதும் முக்கியம் எனக் கருது கிறேன்.
சகிப்புத்தன்மை இல்லா மைக்கு எதிராக இருப்ப தோடு, 1984-ம் ஆண்டு நடந்த சோகத்தை கலிபோர்னிய மக்கள் மறக்க மாட்டோம் என உலகம் முழுக்க உள்ள சீக்கியர்களுக்கு சொல்லிக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.