போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனின் தென்கிழக்கு நகரமான முக்காலாவில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 11 இந்தியர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் மீட்டனர்.
இந்தியர்கள் 11 பேரும் பாகிஸ்தான் கடற்படை கப்பல் மூலம் கராச்சி சென்றடைந்தனர். இந்தத் தகவலை, இந்தியாவிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
கராச்சியில் உள்ள 11 இந்தியர்களையும் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்புவதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
இதற்கான பணிகளை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பசீத் செய்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் முன்வந்து செய்த இந்த மீட்புப் பணி உதவியை இந்தியா ஏற்றுக் கொண்டது.