உலகம்

நிலநடுக்கத்துக்குப் பிறகு 14 அதிர்வுகள்

ஐஏஎன்எஸ்

நேபாளத்தில் லம்ஜங் எனும் மாவட்டத்தில் தான் நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்துக்கு பிறகு 14 நில அதிர்வுகள் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோதரியில் தெற்கு-தென் கிழக்கு திசையில் 28 கிமீ தொலைவில் 5.1 ஆகவும், லம்ஜங்கின் கிழக்காக 49 கிமீ தொலைவில் 6.6 ஆகவும், நாகர்கோட்டில் வடக்கு-வடகிழக் காக 25 கிமீ தொலைவில் 5.5 ஆகவும், பனோட்டியின் தென் கிழக்கில் 5 கிமீ தொலைவில் 4.8 ஆகவும், நாகர்கோட்டில் வடக்கு-வடகிழக்காக 15 கிமீ தொலைவில் 5.0 ஆகவும், கோதரியின் தெற்கில் 25 கிமீ தொலைவில் 5 ஆகவும் இந்த நில அதிர்வுகள் ரிக்டரில் பதிவாகியிருந்தன.

SCROLL FOR NEXT