உலகம்

ஸ்பெயினில் அதிவேக ரயில் தடம்புரண்டு 39 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டின் மலாகாவில் இருந்து மாட்ரிட் நகருக்கு அதிவேக ரயில் நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. அதில் 300 பயணிகள் இருந்தனர்.

அதே நேரத்தில் மாட்ரிட்டில் இருந்து ஹியூல்வா நகருக்கு மற்றொரு ரயில் வந்து கொண்டிருந்தது. இரவு 7.45 மணிக்கு கர்டோபா பகுதியில் மாட்ரிட் சென்று கொண்டிருந்த ரயிலின் கடைசி பெட்டிகள் திடீரென தடம் புரண்டு எதிரில் வந்த ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் எதிரில் 200 பயணிகளுடன் வந்த ரயிலின் பெட்டிகளும் தடம் புரண்டன.

இதில் 39 பயணிகள் உயிரிழந்தனர். 73 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். ஸ்பெயின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆஸ்கர் புயன்டி கூறும்போது,”படுகாயம் அடைந்தவர்களில் பலருடைய உடல்நிலைக் கவலைக்கு இடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது” என்றார்.

SCROLL FOR NEXT