ரஷ்யா அருகே கம்சட்கா தீபகற்ப பகுதியில் ரஷ்ய மீன்பிடி கப்பல் மூழ்கிய விபத்தில் பலியனாவர்கள் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் கம்சட்கா தீபகற்ப கடல் பகுதியில் டால்னி வோஸ்டோக் என்ற மீன்பிடி கப்பல் வியாழக்கிழமை மூழ்கியது.
இந்த கப்பலில் மொத்தம் 132 பயணித்தனர். இதில் கப்பலின் கேப்டன் உட்பட குறைந்தது 56 பேர் பலியாகியதாக தெரிகிறது. 63 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
கடல் உறையும் சூழல், மோசமான வானிலையால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.