உலகம்

பாகிஸ்தான், இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள்

செய்திப்பிரிவு

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா மூன்றுநாள் அரசு முறை பயணமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றுள்ளார். நேற்று அவர் அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசினார்.

அப்போது, பேரிடர் மேலாண்மை, விளையாட்டு, கப்பல் போக்குவரத்து, போதைப் பொருள் தடுப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் இருவரும் நிருபர் களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அதிபர் சிறிசேனா கூறியதாவது: இலங்கை, பாகிஸ்தான் இடையிலான பொருளாதார, வர்த்தக உறவை மேம்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசியபோது, இலங்கையுடனான உறவுக்கு பாகிஸ்தான் முன்னுரிமை அளித்து வருகிறது. பிராந்திய, சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT