உலகம்

பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 10 குழந்தைகள் உள்பட 16 பேர் பலி

செய்திப்பிரிவு

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் இன்று காலை நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஒன்றில் 10 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியானதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

பஞ்சாப் மாகாணத்தில் இருந்து பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று, ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள கலம் மலைப்பகுதி நோக்கி சென்றது. அப்போது திடீரென அருகிலிருந்த நதியை ஒட்டிய சாலையோரத்தில் மோதிய பேருந்து நிலைகுலைந்து கவிழ்ந்து நதியில் விழுந்தது.

இந்த விபத்தில் 10 குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்ததாக ஸ்வாட் பள்ளத்தாக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும், இதுகுறித்த விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT