உலகம்

ஆர்மடில்லோவை கொன்ற‌ தோட்டா பெண்ணையும் துளைத்தது: அமெரிக்காவில் விபரீதம்

பிடிஐ

அமெரிக்காவில், ஆர்மடில்லோ எனும் உயிரினத்தைக் கொல்வதற்காக சுட்டபோது, துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட தோட்டா அந்த நல்லங்கைக் கொன்றதோடு மீண்டும் எகிறி அருகில் இருந்த பெண் ஒரு வரையும் துளைத்தது.

அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தில் வசிப்பவர் லேரி மெகெல்ராய். இவர் கடந்த வார இறுதியில் தன் வீட்டுக்கு வெளி யில் இருந்த ஆர்மடில்லோ ஒன்றைக் கொல்வதற்காக அதனை நோக்கிச் சுட்டார்.

அவர் வைத்திருந்த துப்பாக்கி யில் இருந்து வெளியான தோட்டா, அந்த ஆர்மடில்லோவை கடின மாக தாக்கி கொன்றது. ஆர்மடில்லோ கடினமான தோலைக் கவசமாகக் கொண்டிருக்கும். எனவே, ஆர்மடில்லோ மீது பட்ட வுடன் தோட்டா மீண்டும் எகிறியது.

அவ்வாறு எகிறிய தோட்டா, அருகில் இருந்த வேலி யில் பட்டு, அந்த வேலிக்கு அருகில் இருந்த வீட்டின் பின்புறக் கதவு வழியாகப் பாய்ந்து சென்று, உள்ளே இருந்த கேரோல் ஜான்சன் (74) எனும் மூதாட்டியைத் தாக்கியது. அவர், லேரியின் மாமியார் ஆவார்.

உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்ட அவரின் உடலில் இருந்து அந்தத் தோட்டா நீக்கப்பட்டது. இதனால் அவருக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்பட வில்லை என்று கூறப்படுகிறது.

‘இது ஓர் அசாதரணமான சம்பவம்’ என்று இதனை விசாரணை செய்த போலீஸார் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT