உலகம்

மோடியுடன் நேதாஜியின் உறவினர் சந்திப்பு: ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உறவினர் சூர்ய பிரகாஷ் போஸ் பிரதமர் நரேந்திர மோடியை பெர்லினில் சந்தித்துப் பேசினார்.

அப்போது நேதாஜி சம்பந்த மான ரகசிய ஆவணங்கள் அனைத் தையும் பகிரங்கப்படுத்தும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நேதாஜியின் குடும்பத்தாரை ஜவஹர்லால் நேரு தலைமை யிலான அரசு பல ஆண்டுகள் வேவு பார்த்ததாக அண்மையில் செய்தி வெளியானது. ஜெர்மனியில் வசிக்கும் நேதாஜியின் குடும்பத் தினர் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

தற்போது பிரதமர் மோடி ஜெர்மனியில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். பெர்லின் நகரில் மோடியை கவுரவித்து ஜெர்மனிக்கான இந்திய தூதர் விஜய் கோகலே நேற்று முன்தினம் இரவு விருந்து அளித்தார். அதில் கலந்துகொண்ட சந்திரபோஸின் உறவினர் சூர்ய குமார் போஸ் மோடியை சந்தித்துப் பேசினார்.

இது பற்றி அவர் கூறியதாவது:

நேதாஜி குடும்பத்தாரை நேரு அரசு வேவுபார்த்ததாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. எனவே பிரதமர் மோடியை சந்தித்து நேதாஜி சம்பந்தமான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கையை கவனிப்பதாக உறுதி அளித்த மோடி, உண்மை வெளிவர வேண்டும் என்பதே தனது விருப்ப மும் என என்னிடம் கூறினார்.

உண்மைகள் வெளிவர புலனாய் வுக்குழு அமைக்கப்படவேண்டும். அகிம்சை வழி போராட்டத்தால் தான் நாடு விடுதலை பெற முடிந்தது என பொய் கட்டவிழ்த்து விடப்படுகிறது. நேதாஜியின் பங் களிப்பு இல்லாமல் நாடு சுதந்திரம் பெற்றிருக்க முடியாது.

முந்தைய இரு விசாரணைக் கமிஷன்கள் மோசடியானவை. முகர்ஜி குழு நல்ல வகையில் செயல்பட்டது. ஆனால் அதற்கு புலனாய்வு அதிகாரம் இல்லை என்றார் சூர்ய போஸ். ஹாம்பர்கில் உள்ள இந்தோ-ஜெர்மன் சங்கத்தின் தலைவராக அவர் செயல்படுகிறார். மோடியை கவுர வித்து நடத்தப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்படி அவருக்கு இந்திய தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது.

SCROLL FOR NEXT