உலகம்

அமெரிக்காவில் மீண்டும் இந்து கோயில் மீது தாக்குதல்

பிடிஐ

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான வகையில் படங்கள் கிறுக்கப்பட்டிருந்தன.

அமெரிக்காவில் இத்துடன் மூன்றாவது முறையாக இந்து கோயில்கள் தாக்குதலுக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லேக் ஹைலேண்ட்ஸ் அருகே உள்ள இந்து கோயில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளது. கோயிலின் நிர்வாக பொறுப்பில் இருப்பவரான கிருஷ்ணன் சிங், திங்கள்கிழமை காலை கோயில் சேதப்படுத்தப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்து புகார் அளித்ததாக குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் கூறும்போது, "கோயில் சுவற்றில் இந்து மதத்தை விமர்சிக்கும் விதத்தில் '666' என்ற எண்ணுடன் தலைகீழாக சிலுவையும் வரையப்பட்டிருந்தன. மேலும் பல அவதூறான கிறுக்கல்களும் சுவற்றில் இருந்தன.

இதனைக் கண்டு நாங்கள் அனைவருமே அதிர்ச்சியடைந்தோம். குறிப்பிட்ட மதத்தினரை புண்படுத்தும் விதத்தில் இந்த செயல் உள்ளது" என்றார்.

சம்பவம் குறித்து வேதனையுடன் தெரிவித்த க்ரேசி என்ற 9 வயது சிறுமி கூறும், " இந்த செயல் மிகவும் வேதனை அளிக்கிறது. இது போலான தாக்குதல்கள் தேவாலயங்கள் மீது நடக்க சாத்தியமா? என்று தெரியவில்லை" என்றார்.

கோயில் மட்டுமல்லாமல், அதன் அருகே இருந்த வாகனங்களிலும் ஸ்ப்ரே பெய்ண்டால் அவதூறான கிறுக்கல்கள் இடம்பெற்றிருந்தன.

தாக்குதலால் சேதமைடந்த கோயிலை இந்துக்கள் மட்டுமல்லாது மற்ற மதத்தைச் சேர்ந்து சீரமைக்க உதவினர். இந்தச் சம்பவம் குறித்து டலாஸ் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக இதேபோல, வாஷிங்டன் நகரில் உள்ள இரு வேறு இந்து கோயில்களும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. அதோடு, கோயிலின் சுவற்றில் "கெட் அவுட்" (வெளியேறுங்கள் ) என ஸ்ப்ரே பெயின்ட் மூலம் எழுதப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT