நேபாளத்தில் நேற்று காலை 100 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பெண்கள் உட்பட 17 இந்திய பக்தர்கள் பலியாயினர். மேலும் 28 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத் தினருக்கு பிரதமர் நரேந்திர மேடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தாதிங் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிஸ்வோராஜ் பொக்கரெல் கூறிய தாவது:
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 45 பேர் பசுபதிநாத் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். அங்கு வழிபாடு நடத்திவிட்டு சொந்த ஊருக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். காத் மாண்டுவுக்கு கிழக்கே உள்ள நவுபிஸ் கிராமத்தில் மலைப் பகுதியில் பேருந்து சென்று கொண் டிருந்தபோது, திடீரென 100 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந் ததும் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 14 பேர் சம்பவ இடத்திலும் 3 பேர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட பிறகும் பலியாயினர். இதில் 9 பேர் பெண்கள்.
மேலும் காயமடைந்த 28 பேர் காத்மாண்டுவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் இரங்கல்
இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது: நேபாள பஸ் விபத்து குறித்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தி னருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காத்மாண்டுவில் உள்ள நமது இந்திய தூதரகம், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கவனிப்பதற்காக அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை சம் பவ இடத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. காயமடைந்த பயணிகள் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு மருத்துவமனையிலும் அதிகாரிகள் உடன் இருந்து தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். சிகிச்சை செலவை நமது தூதரகம் ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிபி 5-ம் நூற்றாண்டில் கட்டப் பட்ட பசுபதிநாதர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கான யாத்திரிகர்கள் குறிப்பாக இந்தியர்கள் இக்கோயிலுக்கு புனிதப் பயணம் மேற்கொள் கின்றனர்.