சைபீரியாவில், திருடிய வீட்டில் மன்னிப்புக் கடிதமும், போட்டோவும் வைத்துச் சென்ற வினோத திருடனை போலீஸார் கைது செய்தனர்.
சைபீரியாவின் புரோகோப்வெஸ்க் என்ற சிறிய நகரில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்து ஒரு சங்கிலியையும், சில சிகரெட் பாக்கெட்டுகளையும் திருடியுள்ளார். ஆனால், திருடியதோடு மட்டுமல்லாமல் வினோதமான செயலாக தனது புகைப்படத்தை அங்கு வைத்துவிட்டு அதில் "நான் இன்று என் கட்டுப்பாட்டை மீறுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள் இச்செயலுக்காக என்னையே நான் வெறுக்கிறேன்" என குறிப்பு எழுதி வைத்திருக்கிறார்.
அவரது புகைப்படத்தை வைத்து போலீஸார் அந்த நபரை கைது செய்துள்ளார். கைதான நபருக்கு வயது 26. அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.