உலகம்

வெள்ளை மாளிகையில் அறிவியல் கண்காட்சி: இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம்

பிடிஐ

அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகையில் நடை பெற்ற அறிவியல் கண் காட்சியில் இந்திய வம்சாவளி மாணவர்களின் கண்டுபிடிப்பு களை அதிபர் பராக் ஒபாமா வியந்து பாராட்டினார்.

அமெரிக்க அதிபர் மாளிகையில் ஆண்டுதோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கண்காட்சி அண்மை யில் நடைபெற்றது. இதில் 30 மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.

அவற்றில் மிகச் சிறந்த 12 கண்டுபிடிப்புகளை அதிபர் ஒபாமா நேரில் பார்வையிட்டார். அதில் பெரும்பாலானவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் விஞ்ஞானிகள் ஆவர்.

அரிசோனாவின் ஸ்காட்டேல் பகுதியைச் சேர்ந்தவர் அன்விதா குப்தா (17). இவர் உலகை அச் சுறுத்தும் எபோலா வைரஸ் காய்ச்ச லுக்கு புதிய மருந்துகளை கண்டு பிடிப்பதற்கான மூலக்கூறுகளை பட்டியலிட்டிருந்தார். இதனை அதிபர் ஒபாமா வெகுவாகப் பாராட்டினார்.

கண்காட்சியில் அன்விதாவை நேரில் சந்தித்துப் பேசிய அவர், இந்த இளம் வயதில் இதுபோன்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாதனை புரிவது அரிது, இதை என்னால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்தார்.

இளம் சாப்ட்வேர் நிபுணரான திரிஷா பிரபுவின் புதிய மென் பொருள் கண்டுபிடிப்பும் கண் காட்சியில் இடம்பெற்றது. அநா கரிகமான இணையதள தகவல்கள் குறித்து எச்சரிக்கை செய்யும் வகையில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

மற்றொரு இந்திய வம்சாவளி மாணவரான நிகில் தோஷியின் கண்டுபிடிப்பான கரியமில வாயுவில் இயங்கும் பேட்டரி, கண்காட்சியில் அனைவரின் பார்வையும் கவர்ந்தது.

மேலும் மாணவர் நிகில் பெகாரி யின் கணினிகளுக்கான பயோ மெட்ரிக் பாதுகாப்பு முறை மற்றும் ருச்சி பாண்டியாவின் ‘பயாசென் சார்’ ஆகிய கண்டுபிடிப்புகளை அதிபர் ஒபாமா வெகுவாகப் பாராட்டினார்.

அவர் பேசியபோது, இந்த மாணவர்களின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அமெரிக் காவில் குடியேறியவர்கள் ஆவர், பெற்றோரை போன்றே அவர் களின் பிள்ளைகளும் இப்போது தங்களின் திறமையை வெளிப் படுத்துகிறார்கள். இச்சிறார்கள் ஒருநாள் உலகை மாற்றிக் காட்டு வார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகள் என்றார்.

SCROLL FOR NEXT