உலகம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 45 இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான்

செய்திப்பிரிவு

அரபிக் கடலில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 45 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்தது.

கராச்சி அருகே துறைமுகப் பகுதி அருகே அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவர்களை கைது செய்தததாக பாகிஸ்தன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

கடந்த ஜனவரி 21-ம் தேதி, இந்திய மீனவர்கள் 38 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது 7 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT