உலகம்

அமெரிக்காவில் பொழுதோடு குப்பையை அகற்றிய துப்புரவு தொழிலாளிக்கு தண்டனை

பிடிஐ

அமெரிக்க மாகாணத்தில் குப்பைகளை அகற்ற காலை நேரத்தில் பொழுதோடு பணிக்கு வந்த துப்புரவு தொழிலாளிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் வந்து பொதுமக்களின் தூக்கத்துக்கு இடையூறு செய்ததால் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மாகாணமான ஜியார்ஜியாவில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றுபவர் கெவின் மெக்கில், இவர் தனியார் நிறுவனத்தின் மூலம் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் காலை 5 மணிக்கே பணிக்கு வருவதால், தூக்கம் கெடுவதாக சாண்டி ஸ்ப்ரிங் நகர போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இவர் காலை நேரங்களில் பணியில் ஈடுபடுபட்டதற்கான ஆதாரங்களும் வழங்கப்பட்டன.

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நகர மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பினார். விசாரணையின்போது, நிறுவனம் சார்பில் காலை 7 மணி முன்னர் பணி செய்யக் கூறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

கெவின் மெக்கில், அவராகவே தான் பணிக்கு காலை 5 மணிக்கே வந்ததாகவும், தனது பணியால் வீடுகளில் இருப்போரின் தூக்கம் கெடும் என்று நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் சாண்டி ஸ்ப்ரிங் நீதிபதி, கெவின் மெக்கிலுக்கு 30 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT