இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் மேலும் 4 பேரின் தலையை துண்டித்து கொன்றுள்ளனர்.
இது தொடர்பான படங்களை அந்த தீவிரவாத அமைப்பினர் நேற்று வெளியிட்டனர்.
தங்களுக்கு எதிராக செயல்படும் போராளி குழுக்களுக்கு ஆட்கள் சேர்த்தனர் என்ற குற்றச்சாட்டில் அந்த 4 பேரின் தலையை தீவிரவாதிகள் துண்டித்துள்ளனர். ஆள் நடமாட்டமில்லாத தெருவில் கருப்பு நிற உடையில் முழங்காலிட்டு நிற்கும் அவர்களது தலையை பின்னால் நிற்கும் தீவிரவாதிகள் கத்தியால் அறுத்து துண்டித்துள்ளனர்.
இராக்கின் சலாகிதீன் மாகாணத் தில் இந்த சம்பவம் நடைபெற்றுள் ளதாக தெரிகிறது. அங்கு திக்ரித் பகுதியை ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க அரசுப் படையினரும், ஷியா முஸ்லிம் போராளிகளும் போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஐஎஸ் தீவிரவாதி களுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.
தங்களிடம் பிடிபடுபவர்களை தலை துண்டித்து கொடூரமாக கொல் வதை ஐஎஸ் தீவிரவாதிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு முன்பு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் உட்பட பலரை கொன்று வீடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.