பிரதமர் நரேந்திர மோடி 2-வது வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இரு நாட்டு மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற இந்தியா வின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே. சின்ஹா இலங்கை மீன் வளத் துறை அமைச்சர் ஜோசப் மைக்கேல் பெரேராவை நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து பெரேரா கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி இலங்கைக்கு வருகிறார். அதற்கு முன்னதாக, இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர் பிரதி நிதிகளுக்கிடையிலான பேச்சு வார்த்தையை 12-ம் தேதி தொடங்க வேண்டும் என்று சின்ஹா கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ் வரன் மற்றும் அங்குள்ள மதத் தலைவர்களை சந்தித்துப் பேசு மாறு அவரிடம் தெரிவித்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் புதிய அரசு பொறுப் பேற்றது முதல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது என்று இலங்கை மீனவர்கள் புகார் கூறி வருகின்றனர்.
எல்லையைத் தாண்டியதாகக் கூறி கடந்த மாதத்தில் மட்டும் 86 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள் ளனர். மேலும் அவர்களது 10 மீன் பிடி படகுகளையும் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக இருதரப்பு மீனவப் பிரதிநிதிகளும் நாளை (மார்ச் 5) சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த ஏற்கெனவே திட்ட மிடப்பட்டிருந்தைது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை திடீரென ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.