உலகம்

இஸ்ரேல் பொதுத்தேர்தலில் லிகுட் கட்சி வெற்றி: 4-வது முறை பிரதமராகிறார் நெதன்யாஹு

பிடிஐ

இஸ்ரேல் பொதுத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யா ஹுவின் வலதுசாரி லிகுட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாஹு 4-வது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஏறக்குறைய அனைத்து வாக்கு களும் எண்ணப்பட்டு விட்ட நிலையில், மொத்தமுள்ள 120 தொகுதிகளில் 29 தொகுதிகளில் லிகுட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான இடது சாரி ஜியோனிஸ்ட் யூனியனை விட லிகுட் கட்சி 5 இடங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது.

இதனால், நெதன்யாஹு மிக விரைவிலேயே வலதுசாரிக் கூட்டணி அரசை அமைப்பார் என்பது உறுதியாகியுள்ளது. பயித் யெஹுதி தலைவர் நாஃப்டாலி பென்னட், குலானு தலைவர் மோஷி கஹ்லோன், இஸ்ரேல் பெய்டேனு தலைவர் அவிக்டோர் லிபர்மேன், ஷாஸ் தலைவர் அர்யே தேரி, யுனைட்டெட் டோரா ஜுடாயிஸம் பிரதிநிதிகள் யாக்கோவ் லிட்ஸ்மேன் மற்றும் மோஷி காஃப்னி ஆகியோரிடம் ஆட்சியமைப்பது குறித்து கலந்து ஆலோசித்து விட்டதாக நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.

தற்போதைய பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே நெதன்யாஹு தேர்தலை அறி வித்து விட்டார். தற்போது பெற் றுள்ள வெற்றி மூலம் 4-வது முறை யாக பிரதமராகிறார் நெதன் யாஹு. மேலும் அதிக காலம் இஸ்ரேல் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையையும் இவர் பெறுவார்.

தேர்தலுக்கு முன்பு எடுக்கப் பட்ட கருத்துக் கணிப்பில் ஜியோ னிஸ்ட் யூனியன் குறைந்தது 4 இடங்களை அதிகமாகக் கைப் பற்றும் எனக் கூறப்பட்டது. அக் கணிப்புகளைப் பின்தள்ளி நெதன்யாஹுவின் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.

இஸ்ரேலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் நடப்பதால், கூட்டணி ஆட்சிதான் எப்போதும் அமையும். ஆட்சி யமைக்க யாருக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதைப் பொறுத்து, அக்கட்சிக்கு அதிபர் ருவன் ரிவ்லின் அழைப்பு விடுப்பார்.

தேர்தல் வெற்றிக்கு முன்ன தாகப் பேசிய நெதன்யாஹு தான் மீண்டும் பிரதமராகத் தேர்வு பெற் றாலும், பாலஸ்தீன தனிநாடு கோரிக்கையை ஆதரிக்கப்போவ தில்லை எனத் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT