ஐ.நா. பொது சபையின் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் விவகாரங்களை கவனிக்கும் 5-வது குழுவின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஐ.நா.வில் பணியாற்றும் தன்பாலின உறவாளர்களுக்கு வழங்கப்படும் சலுகையை ரத்து செய்ய வலியுறுத்தி ரஷ்யா சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தீர்மானம் தோல்வி
இந்தத் தீர்மானத்துக்கு இந்தியா, சீனா, எகிப்து, இராக், ஈரான், ஜோர்டான், குவைத், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா மற்றும் யுஏஇ உட்பட 43 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. எனினும், இந்தத் தீர்மானத்தை எதிர்த்து 80 நாடுகள் வாக்களித்ததால் தீர்மானம் தோல்வியடைந்தது.
தன்பாலின உறவாளர் ஒருவர் மற்றொரு தன்பாலின உறவாளரை திருமணம் செய்து கொள்ளவும் அந்த தம்பதிக்கு சலுகை வழங்கவும் ஐ.நா. ஒப்புக்கொண்டது.
இந்த கொள்கை கடந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி நடைமுறைக்கு வந் தது. ஆனால், தன்பாலின உறவை அங்கீகரிக்காத இந்தியா உள் ளிட்ட நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத் தக்கது.