உலகம்

ஒரே நேரத்தில் 20 பற்களை பிடுங்கியதால் மூதாட்டி மரணம்: அமெரிக்காவில் இந்திய டாக்டரின் உரிமம் ரத்து

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் இந்திய பல் டாக்டர் ஒருவர் 64 வயது மூதாட்டியின் 20 பற்களை ஒரே நேரத்தில் பிடுங்க முயன்றதால் அப்பெண் உயிரிழந்தார். இதையடுத்து அந்த டாக்டரின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜுதித் கேன் என்ற அந்த மூதாட்டி கடந்த பிப்ரவரி 17-ம் தேதி இந்தியாவைச் சேர்ந்த பல் டாக்டர் ராஷ்மி பாட்டீலிடம் பல்மாற்று சிகிச்சைக்காக வந்தார்.

அப்போது ஒரே நேரத்தில் 20 பற்களை பிடுங்கி விட்டு செயற்கை பற்களை பொருத்த டாக்டர் ராஷ்மி பாட்டீல் முயற்சித்தார்.

சிகிச்சை நடந்து கொண்டிருந்த போதே அந்த மூதாட்டி சுய நினைவை இழந்தார்.

அந்த நிலையில் சிகிச்சையை நிறுத்துமாறு உதவியாளர் கூறியதை கேட்காமல் ராஷ்மி பாட்டீல் தொடர்ந்து பற்களை பிடுங்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து மூதாட்டியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

இதன் பிறகே அவசர மருத்துவ உதவி சேவையை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர்கள் வரும் முன்னரே அந்த மூதாட்டி உயிரிழந்துவிட்டார். டாக்டரின் கவனக்குறைவால் தான் மூதாட்டி மரணமடைந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து டாக்டரின் மருத் துவ உரிமை ரத்து செய்யப் பட்டது. இதனை எதிர்த்து சுகாதாரத் துறையிடம் டாக்டர் ராஷ்மி பாட்டீல் முறையீடு செய்துள்ளார். இதன் மீது ஜூன் 18-ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.

என்பில்ட் மற்றும் டோரிங்டன் பகுதிகளில் ராஷ்மி பாட்டீல் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

கடந்த டிசம்பரில் அவரிடம் சிகிச்சை பெற்ற 55-வயது நபர் ஒருவர் தவறான சிகிச்சை காரணமாக 6 நாள்கள் வரை மருத்துவமனையில் தங்கி கூடுதல் சிகிச்சை பெற நேர்ந்தது.

டாக்டர் ராஷ்மி பாட்டீல் முறையாக சிகிச்சை செய்வது இல்லை. மருத்துவ துறையிலும் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுகி றார் என்று அவரிடம் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் ஏற்கெனவே குற்றம்சாட்டியுள்ளார்

SCROLL FOR NEXT