உலகம்

ட்விட்டரில் டாப்: இந்தியாவின் மகள் ஆவணப்படத்துக்கு போட்டியாக இங்கிலாந்தின் மகள்கள்

செய்திப்பிரிவு

’இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்துக்குப் போட்டியாக யூடியூபில் வெளியிடப்பட்டுள்ள ‘இங்கிலாந்தின் மகள்கள்’ (United Kingdom's Daughters) என்ற வீடியோ தற்போது ட்விட்டரில் டாப் 10 டிரெண்டிங்கில் உள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த இயக்குநர் உட்வின் எடுத்து பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய 'இந்தியாவின் மகள்' என்ற ஆவணப்படத்திற்கு போட்டியாக இந்தியாவைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் என்பவர் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் பாலியல் பலாத்காரம் எவ்வளவு மோசமாகவும் அதிகமாகவும் நடைபெற்றுவருகின்றன என்பதை விவரிக்கும் விதமாக United Kingdom's Daughters எனற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ ட்விட்டர் ட்ரண்டிங்கில் டாப் 10 டிரெண்டிங்கில் உள்ளது. அப்படியென்ன இந்த வீடியோவில் உள்ளது?

பிரிட்டனில் ஒரு நாளைக்கே 250 பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறதாம்.

இதில் தண்டனை பெறுபவர்கள் 10 சதவீதத்தினர்தானாம்.

ஆனாலும், பாலியல் பலாத்கார கொலைகள் அதிகம் நடப்பதில்லை. காரணம் பலாத்காரத்தில் சிக்கும் பெண்கள் எதிர்த்துப் போராடுவதில்லையாம். என்று இந்த வீடியோவில் தகவல்களை அடுக்கியுள்ளார் ஹர்விந்தர் சிங்.

”மகள் என்றால் மகள்தான், அது இந்திய மகள் என்றோ பிரிட்டன் மகள் என்றோ பார்க்கப்பட வேண்டிய அவசியமில்லை” என்று அவர் தனது யூடியூப் வீடியோ வெளியீட்டில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக இன்னும் பல விவகாரங்களை இந்த வீடியோ பதிவு எழுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT