உலகம்

உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுத போர் நடத்த தயாராக இருந்தோம்: ரஷ்ய அதிபர்

ராய்ட்டர்ஸ்

உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுத போருக்கு ரஷ்யா தயார் நிலையில் இருந்ததாக அதிபர் விளாடிமர் புடின் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் ராஸியோ செய்தி தொலைக்காட்சி, உக்ரைன் - ரஷ்யா உள்நாட்டு பிரச்சினை குறித்து கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஆவணத்தை ஞாயிற்றுகிழமை ஒளிபரப்பியது.

இதில், உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலின்போது ரஷ்ய அரசு மேற்கொண்டிருந்த நிலை குறித்தும் பல முடிவுகள் குறித்தும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த உக்ரைன் நாட்டு முன்னாள் தலைவர் விக்டர் யனுகோவிச்சின் உயிரை காப்பாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்களிடமிருந்து யனுகோவிச்சுக்கு அச்சுறுத்தல் இருந்ததால் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள அவர் ரஷ்யாவின் உதவியை நாடியதாக ரஷ்ய அரசின் அந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் படத்தில் பேசும் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், "கடந்த ஆண்டு கிரிமியா மோசமான நிலைக்கு தள்ளப்பட இருந்தது.

அந்த சமயத்தில் மேற்கத்திய நாடுகளை எதிர்த்தும் நாங்கள் கிரிமியா மக்களுக்கு துணை நின்றோம். அதோடு அல்லாமல், 'எந்த நபரும் இல்லையென்றால், பிரச்சினையும் இல்லை' என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருந்தோம்.

அதன்படி உக்ரைனுக்கு எதிரான அணுஆயுத போருக்கு ரஷ்யா தயார் நிலையில் இருந்தது" என்று புடின் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT