பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மேலும் 12 கைதிகள் நேற்று தூக்கிலிடப் பட்டனர்.
இவர்கள் அனைவரும் தீவிர வாதம் மற்றும் கொலைக் குற்றங் களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் ராணுவ பள்ளியில் கடந்த டிசம்பர் 16-ம் தேதி தலிபான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 132 மாணவர்கள் உட்பட 145-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மரண தண்டனைக்கு 6 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.ஜாங், கராச்சி, லாகூர், ராவல் பிண்டி, மூல்தான், மியான்வாலி, பைசாலாபாத், குரான்வாலா ஆகிய சிறைகளில் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
பாகிஸ்தான் சிறைகளில் மொத்தம் 8000 மரண தண்டனை கைதிகள் உள்ளனர். அவர்களில் இதுவரை 39 கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு மட்டுமே மரண தண்டனையை நிறை வேற்ற பாகிஸ்தான் அரசு முதலில் திட்டமிட்டது. அதன்பிறகு தனது நிலையை மாற்றிக் கொண்ட அந்த நாட்டு அரசு, கொடூர குற்றச்செயல் புரிந்தவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவித்தது.
தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்றால் மரண தண்ட னைதான் சரியான நடவடிக்கை என்று ஒரு சாரார் ஆதரிக்கி றார்கள். ஆனால் மனித உரிமை ஆர்வலர்கள் தீவிரமாக எதிர்க்கிறார்கள்.