பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அபாயகரமான சுனாமி பேரலைகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று (திங்கள்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோளில் 7.5 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் நியூ பிரிட்டன் தீவிலிருந்து அருகே உள்ள கோகோபோவில் 55 கிமீ தூரத்திலும் நிலத்திலிருந்து 33 கிமீ ஆழத்திலும் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய தகவலில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கம் பப்புவா நியூகினியா, நியூ அயர்லாந்து தீவு, நியூ பிரிட்டன் தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
அபாயகரமான பேரலைகள் எழலாம்
இந்த நிலநடுக்கத்தால் சுற்றுவட்டாரப் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் மூன்ற மீட்டர் உயரத்துக்கு பேரலைகள் என்ற எழலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பப்புவா நியூக்கினியாவியை சுற்றிலும் 1000 கிலோ மீட்டருக்குள் சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாக பசபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
பசபிக் பெருங்கடலுக்கு அருகே உள்ள ஆஸ்திரேலியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், நியூ கலிதோனியா, மார்ஷல் தீவுகள், ஃபிஜி, வனாத்தூ ஆகிய பகுதிகளிலும் அபாயகரமான அலைகள் எழும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.