கடந்த சில ஆண்டுகளாக கைவிடப் பட்டிருந்த தலாய் லாமாவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர தயராக இருப்பதாக சீனா சூசகமாக அறிவித்துள்ளது.
திபெத் தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. திபெத்துக்கு சுதந்திரம் அல்லது முழு சுயாட்சி உரிமை கோரி திபெத்தியர்கள் போராடி வருகின்றனர். திபெத் மதத் தலைவர் தலாய்லாமா (79) இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார்.
இதுதொடர்பாக, சீன மக்கள் அரசியல் தூதரக மாநாட்டு அமைப்பின் (சிபிபிசிசி), இனக்குழு மற்றும் மத விவகாரங்கள் குழு தலைவர், ஸோவ் வெய்குன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தலாய்லாமா, தீக்குளிப்பு போராட்டங்களைத் தூண்டிவிட்ட தன் மூலம் இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர்.
எதிர்காலத்தில் தான் செய்வது தவறு என உணர்ந்து, திருத்திக் கொண்டு, திபெத் பகுதிக்கு இடையூறு விளைவிப்பதை நிறுத்தி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எங்களைத் தொடர்பு கொள்வார் என சீனா நம்புகிறது.
திபெத்தின் சுதந்திரம் அல்லது அது சார்ந்த பிரச்சினைகள் குறித்து அவருடன் பேசமாட்டோம். ஆனால் , வேறு பிரச்சினைகள் தொடர்பாக அவருடன் பேசுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.