உலகம்

தீபாவளிக்கு விடுமுறை அறிவித்தது நியூஜெர்சி பள்ளி

பிடிஐ

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள பள்ளியில் தீபாவளி பண்டிகைக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூஜெர்சியில் கிளென் ராக் பப்ளிக் பள்ளி அமைந்துள்ள பகுதியில் அமெரிக்க இந்தியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். எனவே அவர்களின் குழந்தைகள்தான் அங்கு அதிகம் படித்து வரு கின்றனர்.

எனவே தீபாவளி விடு முறை நீண்டகால கோரிக்கை யாக இருந்தது.

இதையடுத்து அப்பள்ளிக்கு தீபாவளிக்கு விடு முறை வழங்குவது குறித்து நிர் வாகம் தீவிரமாக ஆலோசித்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி தினமான நவம்பர் 11-ம் தேதி பள்ளிக்கு விடு முறை அளிக்க முடிவு செய்யப் பட்டது.

அப்பள்ளியில் சுமார் 2,300-க் கும் அதிமான மாணவ, மாணவியர் உள்ளனர். நியூஜெர்சியில் அதிகமான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் வரிசையில் 6-வது இடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT