வங்கதேசத்தில் மேலும் ஒரு வலைப்பதிவாளர் நேற்று கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவை சேர்ந்தவர் வாசிகுர் ரஹ்மான் (27). இவர் இணைய தளத்தில் கடவுள் மறுப்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கட்டுரைகள், கதைகளை எழுதி வந்தார்.
இதுதொடர்பாக அவருக்கு ஏராளமான கொலை மிரட்டல் கள் வந்தன. ஆனால் அவற்றை பொருட்படுத்தாமல் ரஹ்மான் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார். இந்நிலையில் டாக்காவின் தேஜ்கான் பகுதியில் வாசிதர் ரஹ்மானை 3 பேர் சேர்ந்து நேற்று கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
அவர்களில் இருவரை போலீ ஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரி டமும் போலீஸார் விசாரணை நடத்தியபோது, இஸ்லாம் மதத் துக்கு எதிராக ரஹ்மான் கட்டுரை கள் எழுதியதால் அவரை கொலை செய்தோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரியில் அமெரிக் காவைச் சேர்ந்த ஆவிஜித் ராய் (44) என்ற வலைப்பதிவாளர் டாக்காவுக்கு வந்தபோது ஒரு கும்பல் தாக்கி கொலை செய்தது. வலைத்தளத்தில் இஸ்லாம் மதத்துக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டதால் அவரை கொலை செய்ததாக `அன்ச ருல்லா பங்களா’ என்ற அமைப்பு பகிரங்கமாக அறிவித்தது.
இதே விவகாரம் தொடர்பாக பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ருதீனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவர் நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்து வருவது நினைவுகூரத்தக்கது.