உலகம்

சிங்கப்பூர் நிறுவினர் லீ க்வான் தொடர்ந்து கவலைக்கிடம்

ஐஏஎன்எஸ்

சிங்கப்பூரைத் தோற்றுவித்த லீ க்வான் யூவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

91 வயதாகும் லீ, உடல்நலம் பாதிக்கப்பட்டது கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது நிலை மோசமான நிலையில் உள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

1965-ம் ஆண்டு மலேசியாவிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை யடைந்த பிறகு தற்போதைய சிங்கப்பூருக்கான அடித்தளத்தை அமைத்த லீ, அந்நாட்டின் முதல் பிரதமரானார்.

1990ம் ஆண்டு வரை பதவியில் தொடர்ந்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT