பாகிஸ்தானில் இன்று 9 தூக்கு தண்டனை கைதிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானின் லாகூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 மரண தண்டனை கைதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தான் சிறைகளில் மொத்தம் 8000 மரண தண்டனை கைதிகள் உள்ளனர். அவர்களில் இதுவரை 48 கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் ராணுவ பள்ளியில் கடந்தடிசம்பர் 16-ம் தேதி தலிபான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 132 மாணவர்கள் உட்பட 145-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மரண தண்டனைக்கு 6 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியது..