பிரிட்டன் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய சோதனையில் சைபர் திருட்டில் ஈடுபட்ட 57 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரிட்டனிலிருந்து அதிக அளவில் சைபர் திருட்டு நடத்தப்படுவதாக தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், மொத்தம் 25 இடங்களில் அந்நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய ஆப்பரேஷனின் மூலம் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மார்ச் 2 முதல் 6-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் மட்டும் 57 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பன்னாட்டு நிறுவனங்களில் பணப் பரிவர்தணைகளை குறி வைத்து மால்வேர் வைரஸ் மென்பொருள்களை பல நாடுகளின் கம்ப்யூட்டர்களில் செலுத்தியதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.