கடந்த வெள்ளிக்கிழமை மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் போரிஸ் நெம்ட்ஸோவின் உடலுக்கு பொதுமக்கள், அவரது ஆதரவாளர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் களில் ஒருவர், போரிஸ் நெம்ட் ஸோவ் (55). கடந்த வெள்ளிக் கிழமை இரவு மாஸ்கோவில் ஆற்றுப்பாலத்தின் மீது நடந்து சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
போரிஸ், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் கடுமை யான விமர்சகர் என்பதால், அதிபர் மாளிகையிலிருந்து அவரைக் கொல்லும்படி உத்தரவு பிறப்பிக் கப்பட்டிருக்கலாம் என போரிஸின் ஆதரவாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் புதின். இக்கொலை புதினின் புகழைக் கெடுக்க மேற்கொள்ளப்பட்ட சதியாக இருக்கலாம் என அரசுத் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், போரிஸ் நெம்ட்ஸோவின் இறுதி மரியாதை நேற்று நடைபெற்றது. சவப்பெட்டி யில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று இறுதி மரியாதை செலுத்தினர்.
மேலும் சாலைகளிலும், முக்கிய இடங் களிலும் பூக்களை வைத்தும், விளக்கு ஏற்றியும் அஞ்சலி செலுத் தப்பட்டது.