இலங்கையில் அண்மையில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் பாகீரதியின் (41) காவல் 90 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் இருந்து கடந்த மாதம் இலங்கை வந்த பாகீரதியும் அவரது 8 வயது மகளும் கிளி நொச்சியில் உள்ள பெற்றோரை சந்தித்துவிட்டு கடந்த திங்கள் கிழமை பிரான்ஸ் திரும்ப திட்டமிட் டிருந்தனர். ஆனால், இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
தீவிரவாத தடுப்புச் சட்டத்தில் பாகீரதி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பிரான்ஸ் அரசுக்கும் முறைப்படி தகவல் தெரிவித்துள் ளோம். 8 வயது மகள் அவரோடு தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட் டுள்ளது என்று இலங்கை போலீஸார் தெரிவித்தனர்.