உலகம்

சீனாவில் மீண்டும் அணு மின் திட்டம்

பிடிஐ

ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏற் பட்ட சுனாமியின்போது ஏற்பட்ட புகுஷிமா அணு மின் நிலைய விபத் துக்குப் பிறகு முதன் முறையாக அணு மின் நிலைய திட்டத்துக்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது.

லியானிங் மாகாணத்தில் உள்ள அணு மின் நிலைய வளா கத்தில் மேலும் 2 அணு உலைகளை அமைக்க சீன அமைச்சரவையின் திட்டமிடல் முகமை ஒப்புதல் அளித்துள்ளது.

உலகிலேயே அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்தும் நாடாக சீனா திகழ்கிறது.

2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமி பேரலை காரண மாக அந்நாட்டின் புகுஷிமா அணு மின் நிலையம் விபத்துக்குள்ளா னது.

இதையடுத்து அணு மின் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்புதல் வழங்குவதை சீனா நிறுத்திவைத்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT